தமிழகம்

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது

70views

மிழகத்தில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட இரு வார முழு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்தது.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரி தொற்று 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், மே 10 முதல் 24-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவித்தார்.

அதன் படி இன்று அதிகாலை 4 மணி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

200 இடங்களில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினரும், 118 இடங்களில் போக்குவரத்து காவல் துறையினரும் வாகனத்தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 360 இடங்களில் ரோந்து வாகனங்கள் மூலம் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். சென்னையில் 35 மேம் பாலங்கள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன

ஊரடங்குகாலத்தில் தனியாக செயல்படும் மளிகை, காய்கறி, இறைச்சி, மீன்கடைகள் மட்டும் பகல் 12 மணிவரை இயங்கலாம். இவை தவிர டாஸ்மாக் மது பானக்கடைகள், அழகுநிலையங்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும். மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, காய்கறி, மீன்இறைச்சிஆகியவை 12 மணி வரை விநியோகிக்கலாம்.

உணவகங்களில் பார்சல் சேவைக்கும், உணவு விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் செயல் படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகள்,பூச்சிக்கொல்லி, உரம், விதை, மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள் பகல் 12 மணிவரை செயல்படலாம். தலைமைச்செயலகம், மருத்துவம், வருவாய், காவல் உள்ளிட்ட முக்கியதுறைகள் தவிர மற்ற அரசுத்துறைகள் இயங்காது.

தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களும் விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிறதொழிற்சாலைகளும் இயங்காது.

மாவட்டங்களுக்குள், மாவட்டங்களுக்கு இடையே தனியார், அரசுப்பேருந்து போக்குவரத்து, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள்இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத்தேர்வு, வேலைவாய்ப்பு, மருத்துவமனைக்கு செல்ல உரியஆவணங்களுடன் பயணிக்கலாம்.

பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத்தபால்சேவை, மருத்துவமனைகள், பரிசோதனைக்கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளைபொருட்கள், ஆக்சிஜன், எரிபொருள் எடுத்து செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். ரேஷன்கடைகள்காலை 8 முதல் 12 மணிவரை செயல்படும். முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!