தமிழகம்

வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

137views

திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

125 தொகுதிகளில் திமுக மட்டும் அமோக வெற்றி பெற்றுள்ளது. அது இல்லாமல் காங்கிரஸ் 18 தொகுதிகள், மதிமுக 4, விசிக, இடதுசாரிகள் தலா 2 இடங்கள், பிற கட்சிகள் 4 இடங்களில் வெற்றி வாகை சூடி திமுவுக்கு பலம் சேர்த்துள்ளன.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது கொளத்தூர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றுள்ளார். 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராமை வீழ்த்தியுள்ளார்.

கொளத்தூர் கொகுதியில் வெற்றி பெற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், வெற்றிச் சான்றிதழை கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவை வெற்றி பெறச் செய்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். கருணாநிதி வழியில் நின்று சிறப்பான ஆட்சி கொடுப்போம் என உறுதி அளித்த ஸ்டாலின் திமுகவின் 7 அம்ச கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். நாளை நடைபெறும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஸ்டாலினை முதல்வராக தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா எளிய முறையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!