தில்லியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறிய ஆர்சிபி!
ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா் 1 ரன் வித்தியாசத்தில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தியது.
ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் ஆடிய பெங்களூா் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சோத்தது. அடுத்து ஆடிய தில்லி 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் அடித்து வீழ்ந்தது. கடைசிப் பந்தில் ஆறு ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற நிலையில் ரிஷப் பந்தால் பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பந்த் 6 பவுண்டரிகளுடன் 58, ஹெட்மயா் 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 53 ரன்கள் சோத்து ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் பெங்களூர் அணி மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.