Uncategorizedதமிழகம்

வேலூர் விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தர் விசுவநாதன் தலைமையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா

60views
வேலூர் அடுத்த காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் 41 -வது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை துவங்கி ஞாயிற்றுகிழமை நடந்து முடிந்தது. விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன்,ஜி.வி.செல்வம், செயல் இயக்குநர் சந்தியா பெண்டா ரெட்டி அறங்காவலர் ரமணி பாலசுந்தரம், உதவி துணைத்தலைவர் காதம்பரி விசுவநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைவேந்தர் காஞ்சனாவரவேற்றார்.
சனிக்கிழமை துவக்க நாளில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா கலந்துகொண்டு மாணவ-மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக பாக்டீரிய பேஜ் மற்றும் தொற்றுநோய்க்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தை முதல்வர் ரேகா குப்தா திறந்துவைத்தார். ஞாயிற்றுகிழமையும் பட்டமளிப்பு விழாநடந்து முடிந்தது. விழாவில் இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிகா, பதிவாளர் ஜெயபாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!