தமிழகம்

நேர்மையின் முன்மாதிரியாக திகழ்ந்த நான்கு சிறுவர்கள்! ரூ.33,710/- பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் பாராட்டு.

22views
மதுரை மாநகர், C4 திலகர்திடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் (21.08.2026) அன்று கேட்பாரற்றுக் கிடந்த ரூ.33,710/- பணத்தை மதுரை நெல்பேட்டை பகுதியைச் சேர்ந்த M. முகமது அஸ்ரப், த/பெ. முகமது, S. முகமது அஜித், த/பெ. சுல்தான் அலாவுதீன், R. முகமது தௌபீக், த/பெ. ராஜா முகமது மற்றும் U. முகமது அஸ்லாம், த/பெ. உஸ்மான் அலி ஆகிய நான்கு சிறுவர்களும், அப்பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனைப் பாராட்டும் வகையில், (22.08.2026) நேற்று, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S. இராஜேந்திரன், இ.கா.ப., அவர்கள் நான்கு சிறுவர்களின் நேர்மையையும், நற்பண்பையும் பாராட்டி, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் புத்தகங்களை வழங்கி, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!