உலகம்

ஷார்ஜா மருத்துவ பல்கலைக்கழக மாணவிகள் இலங்கையில் மருத்துவ முகாமில் பங்கேற்பு

24views
ஷார்ஜா :
ஷார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் பயிலும் முப்பத்தைந்து மருத்துவ மாணவிகள் அடங்கிய குழு இலங்கையில் கடந்த 22 ஆம் தேதி முதல் மருத்துவ முகாமில் பங்கேற்றனர். இந்த மருத்துவ முகாம் மூலம் ஏராளமான நோயாளிகள் பயன்பெற்றனர். இந்த முகாமின் மூலம் பலதரப்பட்ட நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்கும் முகமாக மருந்துகள் மருத்துவ உபகரண பொருட்கள் அனைத்தும் ஷார்ஜா மருத்துவ கல்லூரியின் சார்பில் வழங்கப்பட்டிருந்தது சிறப்புக்குரியதாகும்.
இது பற்றி ஷார்ஜா மருத்துவ கல்லூரியில் ஐந்தாம் ஆண்டு மருத்துவம் பயிலும் தமிழக மாணவி ரீம் அபுதாஹிர் கூறும்போது ” இதுபோன்ற மருத்துவ முகாம்கள் அமைப்பதன் மூலம் பலதரப்பட்ட நோயாளிகள் இலவசமாக பயன் பெறுகின்றனர். அதேபோல மாணவிகளுக்கும் பலவிதமான நோய்களை கண்டறிந்து குணப்படுத்தும் மருந்துகளை தெரிவு செய்து கொடுக்கும்போது புதுவகையான அனுபவமும் மனதிருப்தியும் உண்டாகிறது என்றார். மேலும் இம்முகாம் இன்னும் ஒருவாரம் நீடிக்கும் எனவும் மேலும் இலங்கையில் பல இடங்களுக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இருப்பதாவும் தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!