தமிழகம்

வேலூர் கோட்டை மைதானத்தில் டிஎஸ்பி யூனிபார்மில் அலறவிட்ட ஒடுக்கத்தூர் பெண் டிஐஜி அதிர்ச்சி

247views
வேலூர் கோட்டை மைதானத்தில் உள்ள பூங்காவில் நேற்று 11-ம் தேதி மாலை ஒரு இளம்பெண் டிஎஸ்பி உடையில் வலம் வந்து கொண்டு இருந்தார். அப்போது வேலூர் வடக்கு காவல் நிலைய காவலர்கள் ரோந்துபணியில் ஈடுப்பட்டு கொண்டு இருந்தனர்.
சந்தேகம் அடைந்த காவலர்கள் இதுகுறித்து வடக்கு காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர். வல்நிலையம் அழைத்து சென்று முறைப்படி விசாரித்தனர். போலி டிஎஸ்பி உடையில் இருந்தவர் வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த நேமபந்தபுரம் கிராமத்தை சேர்ந்த உமாமகேஸ்வரி (33). இவரின் கணவர் கூலி தொழிலாளி. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளன. உமாமகேஸ்வரி 10-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு சென்னை வடபழனியில் தங்கி ஒரு வீட்டில் வேலை செய்துள்ளார். அந்த வீட்டில் 22 பவன் நகை திருட்டு வழக்கில் கைதானவர். சென்னை பூக்கடை பகுதியம் உறவினர் வீட்டில் ரூ.15 ஆயிரமும் திருடியதாக அவர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மேல் அரசம்பட்டு பகுதியை சேர்ந்த லாரி டிரைவருக்கு அறிமுக நண்பராகி, அந்த நபர் பிறந்தநாளைக்கு சர்ப்ரைஸ் கொடுக்க டிஎஸ்பி சீருடை அணிந்து வேலூருக்கு வந்துள்ளார்.
ஆண் நண்பர் வர தாமதம் ஆனதால் வேலூர் காவலர்களிடம் மாட்டிக்கொண்டு உள்ளார். உமாமகேஸ்வரியை வேலூர் வடக்கு காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து கொண்டு இருக்கும்போது, ஆய்வுக்காக டிஐஜி மகேஸ்குமார் வந்தபோது தில்லாலங்கடி பெண்ணை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தீவிரமாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி டிஐஜி உத்தரவிட்டார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!