தமிழகம்

காட்பாடி அடுத்த வரதராஜபுரத்தில் வாழ்ந்து வந்த வீட்டை திடீரென அபகரித்து இடித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு

22views
வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, கரிகிரி, வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், தாம் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டை இடித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், “1998-ஆம் ஆண்டு குணசீலன் என்பவரிடமிருந்து வீட்டை முறையாக வாங்கி, அதில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இந்நிலையில், கடந்த 06.06.2026 அன்று குணசீலன் என்பவர் எங்கள் வீட்டை அபகரிக்க திடீரென இடித்து தரைமட்டமாக்கி சேதப்படுத்தியுள்ளார். இதனால் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!