தமிழகம்

வேலூர் மாவட்ட தினமித்திரன் நாளிதழ் அலுவலகத்தில் தொழிலாளர் தினத்தில் மறைந்த ஆந்திர ஜோதி செய்தியாளருக்கு நினைவு அஞ்சலி

176views
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூரில் தினமித்திரன் நாளிதழியின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அலுவலகத்தில் தினமித்திரன் ஆசிரியர், செய்தியாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சார்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆந்திரபிரதேச மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவில் ஆந்திர ஜோதி செய்தியாளர் ஜெகன்மோகன் ரெட்டி, மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
அதற்கு நினைவு அஞ்சலி செலுத்துவதற்காக அலுவலகத்தில் ஜெகன்மோகன் ரெட்டி புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்ச்சிக்கு தினமித்திரன் நாளிதழ் ஆசிரியர் ஏழிலரசி தலைமை தாங்கினார். நிர்வாக ஆசிரியர் மற்றும் தினமித்திரன் இணையதள வானொலி இயக்குநர் கே.என்.லிங்கம் முன்னிலை வகித்தார். மேலும் தலைமை புகைப்பட கலைஞர் ஜான், சென்னை தலைமை புகைப்பட கலைஞர் நம்பிராஜன், செய்தியாளர் ராஜி. மற்றும் சட்டக்களம் மாவட்ட செய்தியாளர் வாரியார், மக்கள் கருத்து மாவட்ட செய்தியாளர் ராஜன் பாபு, காஞ்சி தலைவன் மாவட்ட செய்தியாளர் ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!