146views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
இனிய பெருநாள் நல்வாழ்த்துக்கள் …!
ஒரு குழந்தையின்
சிரிப்பைப்போல
இனி
இங்கே
குதூகலம் பிறக்கட்டும் …!
மலர்ந்த பூக்களின்
மங்கலம்போல
எங்கும்
மகிழ்ச்சி நிலவட்டும்!
இதோ ரமலான் முடிந்து
பெருநாளை வரவேற்கும்
புதிய பிறை பிறக்கிறது…
வெள்ளி முளைக்கிறது…
பூமியின்
புதிய பாடல் பிறக்கிறது!
இனி
பழைய வெடிகள்
பழுதடைந்து போகட்டும்
மழையின் இடிகள்
மாய்க்காமல் ஆகட்டும்!
போர்களின் முனைகள்
புழுத்துப் போகட்டும்…
புராதனப் பஞ்சாங்கம்
ஒழிந்து சாகட்டும்…
சாதீயச் சண்டாளங்கள்
சமாதி ஆகட்டும் ….!
பசி பஞ்சம் பட்டினிகள்
மாண்டு போகட்டும்…
ஏழை வரிகள் ஜக்காத்தால்
தேசத்தில் இனிமைகள் பூக்கட்டும்….
இல்லாமை கல்லாமை ஒழியட்டும்…
தேசம் எங்கும்
இனி திருவிழா
மனிதம் வாழும்
பூமி எங்கும்
இனி பெருவிழா …!
அர்த்த ஞானியின்
ஞான மலர்ச்சியைப்போல்
இனி இந்த
ஞாலம் எங்கும்
ஞானம் பிறக்கட்டும் …
எங்கும்
சாந்தி –
சமாதானம் –
சமத்துவம் –
சகோதரத்துவம் தழைக்கட்டும் !
அனைவருக்கும்
புதிய
நல்ல வாழ்க்கை மலரட்டும்.!
அனைவருக்கும் இனிய பெருநாள் நலமாகட்டும்.,.
உலகம் சிறப்பாகட்டும்…
add a comment






