உலகம்

கிரீன் குளோப் சமூக நல அமைப்பின் சார்பில் நடைப்பெற்ற துபாயில் இஃப்த்தார் நிகழ்ச்சி

57views
துபாயில் இயங்கி வரும் கிரீன் குளோப் சமூக நல அமைப்பின் சார்பில் அதன் உறுப்பினர்கள் மற்றும் தன்னரவலர்களை கெளரவிக்கும் பொருட்டும், ரமலானின் மேன்மையை பிரதிபலிக்கும் பொருட்டும் இன்று துபாயில் 27 ம் நோன்பின் இஃப்த்தார் நிகழ்ச்சியை நடத்தியது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவன உரிமையாளர் மற்றும் அமீரக காங்கிரஸ் தலைவர் .Dr. அப்துல் மாலிக், ஜாகுவார் பிரின்டிங் நிறுவன உரிமையாளர் ஷா மற்றும் குடும்பத்தார்கள், அன்வர் குரூப் ஆப் கம்பெனிஸ் நிறுவன உரிமையாளர் அன்வர்தீன், பின் ஸைபான் நிறுவனத்தின் CEO சந்திரசேகர், மெரிடியன் மேக் நிறுவனத்தின் CEO சுரேஷ் ரோவே, தொழிலதிபர் முர்தூஜா, AWR நிறுவனத்தின் நிறுவனர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும், ஊடகத் துறை நிபுணர் இதயத்துல்லாஹ், தினேஷ் மற்றும் இந்து குடும்பத்தார்கள் துபாய் காவல்துறையில் பணியாற்றும் ஆயங்குடி ஜமாத் தலைவர் முகமத் ஆரிஃப் MCA, கேப்டன் டிவி கமால், பீஸ் அண்ட் கேர் நிறுவனர் ரபீக் மற்றும் குழுவினர், துபாய் மைந்தன் நஜீர் ஜாபர், முத்தமிழ் சங்கம் ஷாஹுல் ஹமீது, கஸ்தூரி குடும்பத்தார்கள் பீமா குடும்பத்தார்கள் ரூபன் குடும்பத்தார்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் கிறீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்தி, கிறீன் குளோப் அமைப்பின் சேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியை கிறீன் குளோப் உறுப்பினர் தாஹிர் நெறியாள்கை செய்தார். நிகழ்வின் ஒரு பகுதியாக கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டது.கிறீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்களான ரசூல், தாஹிர், அப்துல் ரஹ்மான், பீர் முஹம்மது, சபீர் ஆகியோர்களும் மற்றும் தன்னார்வளர்களும் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசு வழங்கி மரியாதை செய்யப்பட்டனர்.

கலந்து கொண்ட அனைவர்க்கும் இஃப்த்தார் உணவு தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் கலந்துகொண்ட அனைவருக்கும், நிகழ்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!