தமிழகம்

வேலூர் மாநகர மாவட்ட 1,2-வது மண்டல காங்கிரஸ் கட்சி கமிட்டி கிளை அலுவலகத்தை திறந்துவைத்த மாவட்ட தலைவர் வாகித் பாஷா

129views
வேலூர் மாநகர மாவட்ட ஒன்றாவது மற்றும் இரண்டாவது காங்கிரஸ் கமிட்டி கிளை அலுவலம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை இரவு நடந்தது.1-வது மண்டல தலைவர் பாலகுமரன், 2-வது மண்டல தலைவர் ஜான் பீட்டர் தலைமை தாங்கினர்.  வேலூர் மாநகர மாவட்ட தலைவர் எம். வாகித் பாஷா, காங்கிரஸ் கட்சி அலுவலத்தை திறந்துவைத்தார்.

சிறப்பு அழைப்பாளராக பி.டீக்காராமன், சிறப்பு விருந்தினராக மாநில பொதுக்குழு உறுப்பினர் பிரசன்னகுமார். மூத்த காங்கிரஸ் உறுப்பினர் குருஜி பாண்டியன், மற்றும்திருமால், ரகு, துளசிராமன்,’பிரேம், கணேஷ், லோகநாதன், பிரேம்குமார், முனியப்பன், ஜிலான், ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  காட்பாடி சட்டமன்ற சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் பி.சதீஷ்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர் : வேலூர் கே.எம் வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!