தமிழகம்

‘வலிமையான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் முன் வரவேண்டும்’ எழுத்தாளர் முனைவர் என். பத்ரி பேச்சு!

150views
சென்னை ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6 முதல் 14 ஆம் தேதி வரை விவேகானந்தர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. நிகழ்வில் நான்காம் நாள் விழாவில் பிரபல கல்வியாளர் முனைவர் என் பத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லூரி மாணவர்களுக்கிடையே இன்றைய சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று விவேகானந்தர் விரும்பினார் என்பதை தன்னுடைய உரையில் மிக அழுத்தமாக விளக்கினார். அவர்களின் வலிமையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். படிப்பில் முழு கவனம் செலுத்தி அறிவைப் பெற வேண்டும். அதைக் கொண்டு விவேகானந்தர், இராமகிருஷ்ணர் போன்ற ஆன்றோர்கள் வழியில் இந்தியாவின் எதிர்காலத்தை திட்டமிட வேண்டும் என்று தன்னுடைய உரையில் கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை இராமகிருஷ்ணா மடம் சிறப்பாக செய்திருந்தது. நிகழ்ச்சியில், ஏராளமான கல்லூரி மாணவர்களுடன் மதுரை இராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி நித்திய தீபானந்தா, சென்னை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சத்திய ஞானானந்தா, ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கானந்தர், பேச்சாளர்கள் தாமல் சரவணன், அனுக்கிரகா ஆதி பகவான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!