தமிழகம்

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா விருதினைக் கவிஞர் மு.முருகேஷூக்குத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழஙகினார்

108views
சென்னை :
சென்னையில் பபாசி நடத்தும் 49-ஆவது புத்தகக் காட்சி கடந்த ஜனவரி 9 முதல் 21-ஆம் தேதிவரை தொடர்ந்து 14 நாட்கள் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.
இந்தப் புத்தகக் காட்சியில் 1000 அரங்குகளும் பல பல்லாயிரம் தலைப்பிலான நூல்களும் இடம்பெற்றன. சுமார் 15 இலட்சம் பார்வையாளர்கள் இப்புத்தகக் காட்சிக்கு வருகை தந்தனர். 55 இலட்சம் புத்தகங்கள் சுமார் 9 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளன என்று பபாசி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இக்காட்சியில் கடந்த ஜனவரி 19-ஆம் தேதியன்று பபாசியின் சார்பில் பல்துறையைச் சேர்ந்த இலக்கிய சாதனையாளருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறுவர் இலக்கியத்தில் 30-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்த, 2021-ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் ‘பால சாகித்திய அகாதமி விருதினைத்’ தனது ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் கதை’ நூலித்காகப் பெற்ற கவிஞர் மு.முருகேஷூக்குத் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா சிறுவர் இலக்கிய விருதினையும் பரிசினையும் வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில், மக்கள் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித். துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலாளர் எஸ்.வைரவன், பொருளாளர் ஏ.ஆர்.வெங்கடாசலம், துணைத்தலைவர்கள் நக்கீரன் கோபால், வி.புருசோத்தமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!