தமிழகம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி சோதனை சாவடியில் 75 கிலோ கஞ்சா பறிமுதல் அதிரடியாக 2 கைது செய்த காவல்துறை

145views
தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களிலிருந்து கஞ்சா கடத்தி வருவது வாடகை ஆகிவிட்டது, அதுவும் ஆந்திர எல்லையை ஒட்டி தமிழக பகுதியான வேலூர் மாவட்டம் உள்ளது. இதில் காட்பாடி கிறிஸ்தியாண் பேட்டை, குடியாத்தம் பரதராமி காவல்துறையினரின் சோதனை சாவடி உள்ளது. இந்த நிலையில் ஒடிஷாவிலிருந்து தமிழகத்திற்கு வாகனம் மூலம் கஞ்சா கடத்தி வருவதாக வந்த தகவலை யெடுத்து காவல்துறையின் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்தனர்.
ஒரு லாரியை சோதனை செய்தபோது16-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் மறைத்து எடுத்த 75 கிலோ கஞ்சாவை பறிமுதல் லாரியை ஓட்டிவந்த திருவண்ணாமலை அடுத்த கடலாடியை சேர்ந்த பிரகஷ்(34) திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த நிம்மியம்பட்டு வெங்கடேசன் (44) ஆகிய 2 பேரையும் கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!