தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்க மாநில பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாநில கெளரவ தலைவர் சி.ராஜவேலு

148views
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள புஷ்பம்மாள் ஞானசம்பந்த முதலியார் திருமண மண்டபத்தில் மாநில தலைவர் பி.பாஸ்கர் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவ தலைவர் சி. ராஜவேலு தலைமையுரையாற்றினர்.
இந்த மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநில இணை செயலாளர் ஸ்ரீதர், மாநில பிரச்சார செயலாளர்கள் ஆர்.ஜெயக்குமார், எம். அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம்.மகேஸ்வரி, வி.செந்தில் மாநில கெளரவ ஆலோசகர்கள் கி.மணி, இ.ஜோதிராமலிங்கம், தோட்டக்கலைப்பணியாளர்கள், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர் புதுக்கோட்டை, நீலகிரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்துகொண்டனர்.
முன்னதாக மாவட்ட தலைவர் டி.கே.ரமேஷ், செயலாளர் நந்தகுமார், பொருளாளர் ஏ.மணி மாவட்ட நிர்வாகிகள் சம்பத், தாண்டவ மூர்த்தி, ஜெயபால் மற்றும் சங்கஅலுலக உதவியாளர் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்தில் அனைத்து பொது சங்கங்களும் தமிழக அரசு பணியார்களின் கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் வரும் ஜனவரி – 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் செய்வதாக அறிவித்துள்ளது அதில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கமும் பங்கேற்கும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாநில அமைப்பு செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!