தமிழகம்

காட்பாடியை சேர்ந்த பெண் மருத்துவ பணியாளர் ராணிப்பேட்டையில் நடந்த விபத்தில் பைக் மீது அரசு பஸ் மோதி பரிதாபம்

459views
வேலூர் மாவட்டம் பழைய காட்பாடி கே.எஸ்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவர் மின்சார வாரியத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி கலைச்செல்வி(45). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள அரசினர் அரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பணியாளராக வேலை செய்துவந்தார்.
இந்த நிலையில் கலைசெல்விக்கு வாலாஜாவில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அதற்காக காட்பாடியிலிருந்து பஸ் மூலம் வந்த அவர் காரை கூட்ரோட்டில் இறங்கி நின்று இருந்தார். அப்போது லாலாபேட்டை அரசுமருத்துவமனையில் வேலை செய்யும் டிரைவர் ராஜா..பைக்கில் ஏறி மருத்துவமனையில் விடுமாறுகேட்டுக்கொண்டு உள்ளார். பைக்கில் ஏறி சிறிது தூரம் சென்ற நிலையில் காட்பாடியிலிருந்து முத்துக்கடை சென்ற அரசு டவுன் பஸ் மோதியதில் பைக்கில் இருந்து விழுந்தவர் மீது பஸ் சக்கரம் ஏறியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ராணிப்பேட்டை காவல்துறையினர் உடலை கைப்பற்றி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிய காயம் அடைந்த ராஜாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!