தமிழகம்

ஆம்னி பேருந்துகளை தடை செய்ய வேண்டும்! அல்லது ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்!! தமிழக அரசுக்கு ஆம் ஆத்மி தமிழக தலைவர் வசீகரன் கோரிக்கை!!!

132views
மக்களின் போக்குவரத்து நலன் கருதியே தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு கலைஞர் மு கருணாநிதி காலத்தில் ஆட்சி காலத்தில் அனைத்து போக்குவரத்து பேருந்துகளும் அரசுடைமை ஆக்கப்பட்டது,
சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் என்ற பெயர்களில் போக்குவரத்து கழகங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தன.
இன்றும் அந்த அரசு போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது மற்ற மாநிலங்களை விட சிறப்பாக செயல்பட்டு வருகிறது இதனால் தமிழக மக்கள் அதிக பயனடைந்து வருகிறார்கள்.
அதே நேரத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் மக்கள் நலன் கருதி அனுமதி அளிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்பொழுது அந்த ஆம்னி பேருந்துகள் மக்களை கொள்ளை அடிக்கும் நிறுவனங்களாக மாறி வருகிறது.
பண்டிகை விழாக்காலங்களில் ஆம்னி பேருந்துகள் தன்னிச்சையாக அளவுகளுக்கு அதிகமான கட்டணங்களை வசூலித்து வருகிறது இதனால் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் சாசன போக்குவரத்து விதிகளின்படி தனியார் ஆம்னி பேருந்துகள் ஒப்பந்த பேருந்துகளாக மட்டுமே செல்ல முடியும் ஷேர் ஆட்டோ போல தனி நபர்களுக்கு கட்டண சீட்டு வசூலிக்க முடியாது,
ஷேர் ஆட்டோவிற்கே தனித்தனி நபர்களுக்கு கட்டணம் வசூலிக்க கூடாது என்ற விதி இருக்கும் போது அது ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களுக்கும் பொருந்தும்.
மேலும் ஆம்னி பேருந்துகள் பார்சல் சர்வீஸ் (சரக்கு) வாகனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது இது முற்றிலும் போக்குவரத்து விதிகளுக்கு எதிரானது முரணானது.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் நிலையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆம்னி பேருந்துகளுக்கும் ஒரு பேருந்து நிலையம் கொடுத்தது மிகவும் தவறானதாகும்.
வெளியூர்களில் இருந்து வரும் அனைத்து அரசு பேருந்துகளும் சென்னை கிளாம்பாக்கத்துடன் முடிவடைகிறது
சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் வெளியூரிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படுகின்றன கிளாம்பாக்கத்திற்கே வந்தும் சேர்கிறது.
ஆனால் சட்ட விரோதமாக செயல்படும் ஆம்னி பேருந்துகளை மட்டும் சென்னை மாநகரத்துக்குள் அனுமதித்திருப்பது தவறானதாகும்,
அரசு பேருந்து பேருந்துக்கும் தனியார் பேருந்துகளுக்கும் ஏன் இந்த பாரபட்சம் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் அரசு பேருந்துகளில் வெளியூருக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு சென்று தான் ஏற வேண்டும் இரங்க வேண்டும். அதே பயணிகள் சென்னை நகருக்குள் கஷ்டப்பட்டு சென்று வரவேண்டும்.  ஆமனி பேருந்துகளில் செல்வோர் நேரடியாக சென்னை மாநகருக்குள் சென்று இறங்கலாம் எறலாம்.

ஆம்னி பேருந்துகளில் அதிக பணம் கொடுத்து சென்னை மாநகருக்குள்ளேயே நகருக்குள் ஏறி கொள்ளலாம் என்பது தவறானதாகும்.  தனியார் பேருந்துகளுக்கு மட்டும் ஏன் இந்த தனிச்சலுகை!
அனைத்து ஆம்னி பேருந்துகளும் சட்டத்திற்கு புறம்பாக வாகனத்திற்கு அனுமதி பெற்று விட்டு வாகனங்களை இயக்குகிறார்கள், பாண்டிச்சேரி மிசோரம் நாகலாந்து போன்ற மாநிலங்களில் வாகனங்களை பதிவு செய்துவிட்டு அங்கு வரி செலுத்தி விட்டு தமிழ்நாட்டில் வந்து இயக்குகிறார்கள்.
ஒப்பந்த பேருந்துகளாக (Tour On Contract Bus) செயல்பட வேண்டிய ஆம்னி பேருந்துகள் அரசு பேருந்துகளைப் போல் தனித்தனி நபர்களுக்கு கட்டண சீட்டு வழங்கி கட்டணம் வசூல் செய்கிறார்கள் இது போக்குவரத்து விதிகளின்படி மிகப்பெரிய சட்டவிரோத செயலாகும்.
ரயில் நிலையம், விமான நிலையம் செல்வது போல் பேருந்துகளில் வெளியூர்களுக்கு செல்ல இருக்கும் பயணிகளும் கிளாம்பாக்கம் போய் பேருந்துகளில் செல்வது தான் சரியானதாகும்.
அரசு பேருந்துகளை சென்னை மாநகருக்குள் அனுமதிக்காத பட்சத்தில் ஆம்னி பேருந்துகளுக்கு மட்டும் சென்னை மாநகருக்குள் அனுமதிப்பது கூடாது,
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கும் அரசு அனுமதி வழங்கினால் அது நேரடியாக அரசு பேருந்துகளின் பயண கட்டனத்திற்கு இணையாக தான் இருக்க வேண்டும்.  ஆம்னி பேருந்துகளுக்கென தனிச் சலுகை சட்டத்திற்குப் புறம்பாக வழங்கிட கூடாது.
ஆகவே தமிழக அரசு பேருந்துகளிலும் ஆம்னி பேருந்துகளுக்கு இணையான சொகுசை அரசு பயணிகளுக்கு வழங்க வேண்டும்
அப்படி தனியார் பேருந்துகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் ஒப்பந்த அடிப்படையில் இல்லாமல் தனியார் பேருந்துகள் அரசு பேருந்துகளுக்கு இணையான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.
போக்குவரத்து சட்டங்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆம்னி பேருந்துகளுக்கு தடைவிதிக்க வேண்டும் அல்லது அதை ஒழுங்குபடுத்த வேண்டும்.  மக்களின் நிறுவனமான அரசு போக்குவரத்து கழகங்களை மேம்படுத்தி அதிகப்படியான சொகுசு பேருந்துகளை இயக்கினால் மக்களும் போக்குவரத்து தொழிலாளர்களும் போக்குவரத்து துறையும் பயணடைவார்கள்.  என்று தமிழக ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக தமிழக அரசையும் போக்குவரத்து துறையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
வசீகரன்
மாநிலத் தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
23/12/2025

Right Click & View Source is disabled.

error: Content is protected !!