தமிழகம்

காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா கோலாகலம் !!

100views
வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீகல்யாண ரெங்கநாதர் உடன் உறைவாலில் சிறப்பு கொண்ட ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஜெயந்தி விழா நடைபெற்றது.  காலையில் கோ பூஜை, கடம்பூஜை, லட்சர்ச்சார்ன புஷ்பயாகம். திருப்பாவாடை, அபிஷேகம். திவ்யதேசபிரசாதம் சாத்துதல் பின் பிரசாத விநியோகம் பின்பு மூலவருக்கு மகா தீபாராதனை நடந்தது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வேலுர் மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவர் நா.அசோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். ஏற்பாடுகளை ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் சுவாமி பக்தா சபாவினர் செய்து இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!