தமிழகம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு வருகை புரிந்த இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு

195views
வேலூர் அடுத்த ஸ்ரீபுரத்தில் உள்ள தங்க கோயிலில் இந்திய ஜனாதிபதி திரெளபதி முர்மு, ஸ்ரீலட்சுமிநாராயணியை தரிசனம் செய்தார். ஜனாதிபதி முர்முவுக்கு, கோயில் ஸ்தாபகர் சக்தி அம்மா தரிசனத்திற்கு பின்பு சுவாமியின் பட்டுவஸ்திரங்களை வழங்கினார். பிறகு தங்கசடாரி வைத்து ஆசி வழங்கினார்.
முன்னதாக ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து இராணுவ ஹெலி கேப்டர் மூலம் தங்க கோயில் ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய ஜனாதிபதிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக அமைச்சர் காந்தி, வேலூர் கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் பூங்கொத்து வழங்கினார்கள்.
கோயிலுக்கு சென்ற ஜனாதிபதி வெள்ளி விநாயகர், ஸ்ரீனிவாச பெருமாள்.மகாலட்சுமியை தரிசனம் செய்தார். பிறகு தியானமண்டபம் திறந்து மரக்கன்றை நட்டார். பின்பு பகல் 12.35 மணிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருப்பதி புறப்பட்டு சென்றார். ஜனாதிபதி வருகை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் முழுவதும் தமிழக சிறப்பு காவல்படையுடன் 1, 200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு இருந்தனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!