தமிழகம்

ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு கவிக்கோ விருது

379views
தமிழிலக்கிய உலகின் அரை நூற்றாண்டுக்கால வரலாற்றை எழுதுபவர்கள் யாராக இருந்தாலும் அதில் தவிர்க்கவே முடியாத ஓர் இதழ் ‘கவிதை உறவு.’
50 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தவம் போல் ‘கவிதை உறவு’ இதழினை நடத்திவரும் கலைமாமணி ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன் அவர்கள், இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் எண்ணற்ற இளைய படைப்பாளிகளுக்கு தனது இதழின் வழியாக சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்ற பெருமைக்குரியவர்.
வங்கி உயர் அதிகாரி, எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், நாடக ஆசிரியர், இதழாளர் என பன்முக ஆளுமையாய் விளங்கிவரும் ஏர்வாடியாருக்கு இந்த ஆண்டிற்கான ‘கவிக்கோ விருது’ வழங்கப்பட்டிருக்கிறது.

வரும் 2025 டிசம்பர் 6 அன்று (சனிக்கிழமை – மாலை 5 மணி) வேலூர் சத்துவாச்சாரி சோலை அரங்கில் நடைபெறும் விழாவில் ‘கவிக்கோ’ விருதினைப் பெறவுள்ளார்.
மு.முருகேஷ்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!