230views
உலகெங்கும்
உரக்கக் கேட்கும் சொல்,
நிறைய மனிதர்களை
உறக்கம் கெட வைக்கும்
ஓர் ஓற்றைச்சொல்…
கல்லூரிகள் எல்லாம்
காசுக்கு கடைவிரிக்கும்
வணிகச்சொல்,
நாடே பரபரக்கிறது…AI!
கவிதை, கட்டுரை, காட்சிகள் எல்லாமே
சுலபமாய்…
வாழ்க்கையே
செயலியால்….என் உயிர்மொழி
எங்கோ மாயமாய்,
தேடுகிறேன் கணினி , செல் திரையில்!!
செயற்கை நுண்ணறிவு சிரிக்கிறது,
பல மொழிகளில்.
பொய்யும், மெய்யும்
புரியாமல் போகிறது தினம்…தினம்!!!
~முகுந்தன் தேவநாதன், அமீரகம்
add a comment






