தமிழகம்

சென்னை-அரக்கோணம் 49 மின்சார ரயில்கள் இன்டர்லாக் பேனலை இயக்குவதற்காக வரும் 23-ம் தேதி ரத்து

139views
சென்னை சென்ட்ரலுக்கும்- அரக்கோணத்துக்கும் இடையே உள்ள திருநின்றவூர் ரயில்வே நிலையம் அருகேயுள்ள யார்டில்’ இன்டர்லாக்’ பேனலை இயக்குவதற்காகவும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்சேவைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் சென்னை அரக்கோணம் வழியாக இயக்கப்படும் 49 மின்சார ரயில்கள் வரும் 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 3.40 வரை நிறுத்தப்படுகிறது.

மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 6.30 மணிக்கு அரக்கோணம் வரையும், 7 மணி மற்றும் 7.25 மணிக்கு திருத்தணி வரையும், காலை 8.20 மணிக்கு அரக்கோணம் வரையும், காலை 9.10 மணிக்கு திருத்தணிக்கும், 9.50 மணிக்கு திருப்பதிக்கும், 11 மணிக்கு அரக்கோணத்துக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும். அதேப்போல் பெங்களூரு, சேலம் மார்கத்திலிருந்து வரும் விரைவு பயணிகள் ரயில் காட்பாடி சந்திப்பில் ஞாயிற்றுகிழமையன்றுநிறுத்தப்படும், சென்னை சென்ட்ரலுக்கு செல்லாது…அதேப்போல் சென்ட்ரல் ரயில்நிலையிலிருந்து புறப்படும் பயணிகள் ரயில்கள் நேரம் மாற்றி இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்து உள்ளது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!