தமிழகம்

முனைவர் என். பத்ரிக்கு பேக்கி டெர்ம் டேல்சின் சிறந்த எழுத்தாளருக்கான 2025 விருது

159views
பேக்கி டெர்ம் டேல்சின் சிறந்த எழுத்தாளர்களுக்கான2025 விருது நவம்பர் 13ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை இந்த அமைப்பின் நிறுவனர்கள் உமா அபர்ணா ,லட்சுமி பிரியா ஆகியோர் செய்திருந்தனர். யுகியோதோ நிறுவனத்தின் அர்ஜுன் சௌத்ரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த எழுத்தாளர் களுக்கான விருதினை வழங்கினார். சுமார் 300 எழுத்தாளர்கள் தங்களுடைய படைப்புகள் இந்த நிறுவனத்தின் மூலம் விருது கொடுத்து சிறப்பிக்கப்பட்டார்கள். இதில் முனைவர் என் . பத்ரிக்கும் இந்த சிறப்பு விருது வழங்கப்பட்டது.

முனைவர் என். பத்ரி பல புத்தகங்களைையும், 400க்கு மேற்பட்ட கட்டுரைகளைையும் 60க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் பல்வேறு இதழ்களில் வெளியிட்டுள்ளார். அவருடைய முதுமை ஒரு வரம் என்னும் நூலும் வாய்ப்புகள் வெற்றிகளாகட்டும் என்ற நூலும் வாசகர்களால் மிகவும் பாராட்டப்பட்டு படிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!