கவிதை

அமெரிக்காவை வியக்க வைத்த ஆச்சரியக் குறி…

97views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
எவருக்கும் தலைசாய்க்காத
அமெரிக்க ஏகாதிபத்தியத்தை
அண்ணாந்து பார்க்க வைத்த
அவர் ஓர் ஆச்சரியக்குறி…
ட்ரம்சுகளின் சத்தத்தையும்
மீறிப் பாய்ந்த
அதிகார வல்லரக்க டிரம்புகளின்
மமதைகள் கலைத்த சமதை..
பூர்ஷுவா தத்துவங்களுக்கு எதிரான
இந்தியப் பூர்வீக ஆன்மீகக் கவிதை…
ஸொஹரான் மம்தானி
இந்தியாவின்
சாரே ஜஹான்ஸே அச்சா…
நல்ல மன யூதருக்கு வேண்டியவர்..
கிறித்தவ
வேதருக்கும் வேண்டியவர்…
அமெரிக்க மாதருக்கும் வேண்டியவர் …
ட்ரம்ப் போன்ற
சூதருக்கு மட்டும் வேண்டாதவர்…
அவர் அளந்து வைத்தக்
காலடி எட்டுகளில்
கிட்டி இருக்கிறது
மாபெரும் வெற்றி….
அவரை வர விடமாட்டோம் என்று
கொக்கரித்துக் கூடிய
கோடீஸ்வரக் கேடிகளின்
குரல்வளைகளில்
கட்டி இருக்கிறது நெறிகட்டி…
என்னை அசைக்க முடியாது
என ஆர்ப்பரிக்கிறார் அவர்…
நானில்லாமல் உன்னால் தேசத்தின்
வரவேற்பு வாசகத்தை
இசைக்க முடியாது
என்கிறார் இவர்…
உங்கள் கரங்களோடு கரமாக
கால்களோடு கால்களாக
இயல்புகளோடு இசைவாக
நாங்கள் இருக்கிறோம்
என்கிறார் வாக்களித்த மக்கள்…
பலசாலிகளால் சூழப்பட்ட
வலசாரி
அமெரிக்காவின் நகரத்தலைமையாக
இப்போது
இடமாற்றி வைத்திருப்பது
ஓர் இடசாரி..
இடையூறு இல்லாத
எளிய பாதசாரி…
அமெரிக்காவின்
புதிய மேயர்
மனிதாபிமானமிக்க நேயர்…
மக்களின் அன்புக்குப் பாத்திரமான
அமைதி சமாதானங்களை
முன்மொழியும் வாயர்…
வாழ்த்துவோம்
அவரை வாயார…
அமெரிக்கா
புதிய தடங்களில் நடக்கட்டும்
கொஞ்சம் காலாற…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!