தமிழகம்

குடியாத்தம் பகுதியில் 11 ஆயிரம் போதை மாத்திரை பறிமுதல் ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் கைது !!

112views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பெரும்பாடியில் கடந்த மாதம் 11-ம் தேதி குடியாத்தம் நகர காவல்துறை சோதனையில் போதை மாத்திரைகளை பயன்படுத்திய மற்றும் தொடர்பில் இருந்த 16 பேரை கைது செய்தனர். போதை மாத்திரை குடியாத்தத்திற்கு எப்படி? வந்தது? குறித்த விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டம் பெகப்பூர், சயாகி தானியா கிராமத்தை சேர்ந்த பிரதாப்சவுத்ரி(26) கைது செய்த வேலூர் மாவட்ட தனிப்படை காவல்துறையினர் அவனதுஜெய்ப்பூர் வீட்டில் சோதனை செய்து 11 ஆயிரம் போதை மாத்திரைகளைபறிமுதல் செய்து அவனை குடியாத்தம் நகர காவல் அழைத்து வந்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!