தமிழகம்

‘இன்றைய காலத்தில் உறவுகளை கொண்டாட நாம் பழகிக் கொள்ளவேண்டும்’ முனைவர் என். பத்ரி பேச்சு.

340views
5 ம் தேதி மாலை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘உறவின் உன்னதம் அறிவோம்’ என்ற தலைப்பில் முனைவர் என். பத்ரி பங்குபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
உறவின் முக்கியத்துவம் பற்றியும், உறவுகள் காலப் போக்கில் எப்படி சிதைந்து விட்டன என்பது பற்றியும் , நடைமுறை உதாரணங்களுடன் , இராமாயண, மகாபாரத கிளைக் கதைகளுடன் மிக விரிவாக விளக்கி, உறவுகள் மேம்பட எப்படி நம் வாழ்க்கை முறையை, கல்வியை, எண்ணங்களை, பெற்றோர்கள் நடத்தையை, மாற்றி அமைக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரும் உரையை ரசித்து முனைவர் திரு பத்ரியைப் பாராட்டினர்.

நூலகர் பாஸ்கர் வரவேற்றார். நூலகர் மணிகண்டன் விருந்தினரை அறிமுகம் செய்தார். நூலகர் ரவி கிருஷ்ணன் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை நூலகர் சதீஷ் ஒருங்கிணைத்த்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!