தமிழகம்

குடியாத்தத்தில் ரூ.1.88 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்த ஆட்சியர் சுப்புலெட்சுமி

124views
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகம் அருகில் ரூ 1.88 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் – பதிவாளர் அலுவலகத்தை கோட்டை அரசு நிகழ்ச்சியில் காணொலி மூலம் முதல்வர் திறந்துவைத்தார். அதனை தொடர்ந்து மாலையில் வேலூர் மாவட்ட ஆட்சி தலைவர் சுப்புலெட்சுமி குத்து விளக்கு ஏற்றிவைத்து அலுவலகத்தை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலு. பதிவுத்துறை துணைத்தலைவர் அருளசாமி, மாவட்ட பதிவாளர் ராஜா, வருவாய் கோட்டாட்சியர் சுப லெட்சுமி, நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன், தாசில்தார் பழனி, சார்பதிவாளர் (பொ) சேகர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சார் – பதிவாளர் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!