தமிழகம்

வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல் அலுவலக விழிப்புணர்வு நடைபயண பேரணியை துவக்கிவைத்த அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ராஜகோபாலன்

97views
வேலூர் அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் சார்பில் அஞ்சல்துறை தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக 27-ம் தேதி அடுத்த மாதம் 2-ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையெட்டி வேலுர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பு அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணியை வேலூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் என்.ராஜகோபாலன் துவக்கிவைத்தார். இதில் வேலூர் முதுநிலை அஞ்சல் அலுவலர் என்.முரளி, கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுவாமிநாதன், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சங்கர், சுந்தர்ராஜ், மற்றும் அஞ்சல் அலுவலர்கள், பணியாளர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!