தமிழகம்

பேனாக்கள் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சி : கிரைம்கதை மன்னன் ராஜேஷ்குமாருடன் வாசகர்கள் சந்திப்பு

135views
பேனாக்கள் பேரவையின் சிறப்பு நிகழ்ச்சி எழுத்தாளர் என் சி மோகன் தாஸ் தலைமையிலான குழுவினர் மூலமாக, கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் மர்மக்கதை மன்னன் ராஜேஷ்குமாருடன் கலந்துரையாடல் நிகழ்வு சிறப்பாக நடந்தது. சாய் மேட்ரிமோனியல் பஞ்சாபகேசன் முன்னிலை வகித்தார்.
எழுத்தாளர்கள் வெறும் ஏட்டு சுரைக்காயாய் இல்லாமல் சமூகத்திற்கும் உத வேண்டும் என்று இந்த நிகழ்வுகள் தொடர்ந்து நடத்தப் படுகின்றன. இதில் எழுத்தாளர் ஒருவரின் மனைவியின் மருத்துவ உதவிக்கு வெ.தயாளனும், ,அனாதை பினங்களை புதைக்கும் ரோஜா எனும் பெண்மணி சேவைக்கு என்.ஆர்.சம்பத்தும், கல்வி உதவிக்கு என். சி. எம் ..ஆக மொத்தம் 25 ஆயிரம் ரூபாய் ராஜேஷ்குமார் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது.

ராஜேஷ்குமார், பல்வேறு வினாக்களுக்கு விடையளிக்கும் பாணியில் தனது இலக்கியப் பங்களிப்பு குறித்து சுவாரசியமாக விவரித்தார். ஏழைகள் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இலவச திரும்ம சேவை செய்து வரும் பஞ்சாபகேசன்,மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மூலமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொண்டாற்றி வரும் ஆவின் மேலாளரான கோபிநாத், லேனா தமிழ்வாணன், உரத்த சிந்தனை உதயம் ராம், ஆம்புலன்ஸ் சேவையாளர் சாந்தகுமார் ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

-ஆர்.நூருல்லா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!