கவிதை

கண்ணறியா இமைக் குற்றம்

92views
மனதின் ஓட்டம் மனிதன் கையில்
இருந்தும் அக்கறை கொள்வதில்லை
மந்தியைப் போல எத்தனை தாவல்கள்
அதையும் கண்டு கொள்வதில்லை
கோபம் வெறுப்பு பேச்சு சிரிப்பு
அமைதியைக் காட்டத் தெரியவில்லை
இன்பம் துன்பம் ஒன்றாய்ப் பார்க்கும்
பக்குவம் அதற்கு வரவில்லை
உன்னுள் இருக்கும் தன்னை அறியும்
நேர்மை வளர்க்கும் திறமையில்லை
உன் முன் உன்னை நிறுத்துகின்ற
தைரியம் ஏனோ வரவில்லை
நல்லது கெட்டது சொல்லும் உரிமை
உனக்கே உனக்கது புரியவில்லை
உணர்ச்சிகள் காட்டி உன்னைக் குழப்பும்
மனதை அடக்கத் தோன்றவில்லை
புலன்களை முடுக்கிடும் சாவித் திருடன்
மனமென்று இன்னுமா அறியவில்லை
அருகில் இருந்தும் இமையின் குற்றம்
கண்ணுக்கு ஏனோ தெரிவதில்லை
கவிப்பார்வை
சென்னை

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!