தமிழகம்

உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் 84 வது ஆண்டு துவக்க விழா.

122views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு துவக்க விழாவில் மாநில பொதுச் செயலாளர் பி.வி. கதிரவன் கலந்து கொண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் பி கே மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து பின்னர் கட்சியின் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு விழாவை முன்னிட்டு மாநில பொதுச் செயலாளர் பி வி கதிரவன் தலைமையில மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மாவட்ட தலைவர் ஆதிசேடன் மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ஐ ராஜா முன்னிலையில் 84 ஆவது ஆண்டு கட்சியின் துவகக விழாவினை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கினர். இதில் மாநிலச் செயலாளர்கள் பசும்பொன் பாஸ்கர பாண்டியன் மாநில தொழிற்சங்க செயலாளர் வடிவேல் எவரெஸ்ட் பால்சாமி நகரச் செயலாளர் சபரி ராஜன் நகரத் தலைவர் கண்ணன் நகர பொருளாளர் சௌந்தரபாண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆச்சி ராசா தெற்கு ஒன்றிய செயலாளர் தனஜெயம் ஒன்றிய நிர்வாகிகள் மணி முத்து முருகன் வில்லானி ராஜா சித்ரா கண்ணன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினர்.
படம் விளக்கம்: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலையில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 84 வது ஆண்டு விழாவில் மாநில பொதுச் செயலாளர் பி வி கதிரவன் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கினார் அருகில் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!