தமிழகம்

உசிலம்பட்டியில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வித்யாசமான முறையில் கிரிக்கெட் போட்டியை காண வந்த அனைவருக்கும் மதிய உணவுகள் வழங்கப்பட்டன.

466views
உலகம் முழுவதும் உலக பட்டினி தினமாக இன்று கடைபிடிக்கப் பட்டு வருகின்றது.இதனையொட்டி பல்வேறு அமைப்பினரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் உசிலம்பட்டியில் ஒரு அமைப்பினர் வித்யாசமான முறையில் கொண்டாடி அசத்தினர்.  மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த ஆக்ஸ்போhடு கிரிக்கெட் கிளப் என்ற தனியார் அமைப்பு சார்பில் வருடம் தோறும் இளைஞர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகின்றது.  இந்த வருடம் உசிலம்பட்டி அரசுப்பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகின்றது.  உலக பட்டினி தினத்தை முன்னிட்டு இன்று சற்று வித்யாசமாக சிந்தித்த கிரிக்கெட் கிளப் அமைப்பினர்  மைதானத்தில் கிரிக்கெட் போட்டியை காண வந்த அனைவருக்கும் மதிய உணவு வழங்கி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர்.

செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!