தமிழகம்

பிரபல தொழிலதிபர் மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன் உடல்நிலை குறைவால் மரணம்

160views
பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து தி. கண்ணன் ( 70)  தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும் தனிப் பெரும் பேராற்றல் மிக்கவர். கண்ணியமும் நேர்மையும் மிக்க கல்வியாளர், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், தென்னகத்தில் முறையாகப் பொருள் ஈட்டி அதிக அளவில் வருமான வரி செலுத்தும் தொழில் அதிபர், கருமுத்து தி. கண்ணன்.
இன்று காலை 4-50 மணியளவில் காலமானார்.   அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை பகல் 2 மணிக்கு கோச்சடை இல்லத்தில் நடைபெறுகிறது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!