தமிழகம்

உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி. இரண்டு பேர் படுகாயம். போலீசார் விசாரணை

227views
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வி.பெருமாள் பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் குமார். இவர் வி.பெருமாள் பெட்டி கிராமத்திலிருந்து ஆட்களை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோவில் உசிலம்பட்டிக்கு வந்துள்ளார்.உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் டி.இ.எல்.சி பெண்கள் பள்ளி அருகே வரும் போது திடீரென நாய் குறுக்கே வந்ததால் டிரைவர் பிரேக் அடிக்க ஷேர் ஆட்டோ கட்டுப்பாட்டை இpழந்து கவிழ்ந்தது.இதில் வி..பெருமாள்பட்டியைச் சேர்ந்த முதியவர் மாயாண்டி(80) சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.ஆட்டோ டிரைவர் சதீஷ்குமார்(27) ஆட்டோவில் பயணம் செய்த சிட்டுக்கருப்பாயி(55) ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவமறிந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!