தமிழகம்

வேலூர் அருகே பாலமதி மலையில் கர்ப்பிணிப் பெண் அடித்துக் கொலை சப் இன்ஸ்பெக்டர் மகன் கைது

146views
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பாலமதி மலையில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக பாகாயம் காவல்துறைக்குதகவல் கிடைத்தது. உடனடியாக வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் பி எஸ் பி திருநாவுக்கரசு மற்றும் பாகாயம் காவல்துறையினர் விரைந்து சென்று உடலை மீட்டு பிரோதபரிசோதனைக்கு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தீவிர சிசிடி விமூலம் விசாரணை செய்ததில் இந்தப் பெண்ணை கொலை செய்த நபர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் ரமேஷ்பாபு என்பவரின் மகன் கார்த்தி (22)என்று தெரியவந்தது உடனடியாக கார்த்திகை கைது செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
வேலூர் காட்பாடி விஜிராவ்நகரில் வசித்து வந்த கார்த்திக் சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் ஏசி மெக்கானிக்காகவேலை செய்து வந்தது தெரிய வந்தது. பின்பு அந்த வேலையை விட்டுவிட்டுவீட்டில்இருந்துள்ளான். பிறகு பெற்றோர்கள் அவனை வீட்டை விட்டு அனுப்பி விட்டனர். அதனை தொடர்ந்து வேலூர் தொரப்பாடியில் உள்ள அவனது நண்பர் வீட்டில் தங்கிக் கொண்டு மேளம் அடிக்கும்தொழிலை செய்து வந்துள்ளான். இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் மூலம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த குணப்பிரியா (22)என்ற பெண் சென்னை தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தங்களின் செல் போன் எங்களைக் கொண்டு தொடர்ந்து பேசி வந்த நிலையில் அது காதலாக மாறி இருவரும் திருமணம் பெற்றோருக்கு தெரியாமல் செய்து கொண்டுள்ளனர். தொடர்ந்து இருவரும் கார்த்திக்கின் நண்பர் வீட்டில் தங்கி இருந்துள்ளனர். இந்த நிலையில் குணப்பிரியா ஆறு மாத கர்ப்பிணியானார். அவர் தனது சித்தியை பார்க்க சில தினங்களுக்கு முன்பு சிதம்பரம் சென்று திரும்பி உள்ளார்.  நேற்று முன்தினம் வேலூருக்கு வந்த குணப்பிரியாவை அழைத்துச் செல்ல வந்த கார்த்திக் நண்பர் வீட்டுக்கு செல்ல வேண்டாம்.  வேறு இடத்துக்கு சென்று தங்கி விட்டு பிறகு வேறு வாடகை வீட்டிற்கு சென்று விடலாம் என்று கூறி வேலூர் அருகே உள்ள பாலமதி மலைக்கு அழைத்து சென்று உள்ளான். இந்நிலையில் பாலமதி மலையில் இரவில்தங்கியிருந்தபோது நமது திருமணத்தை வீட்டில் சொல்ல வேண்டும் என்று குணப்பிரியா பிடிவாதமாக கார்த்திக்கிடம் கூறியுள்ளார்.  இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் அருகில் இருந்த ஒரு கட்டையை எடுத்து குணப்ரியாவின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார். பின்பு அருகில் இருந்த மது பாட்டிலால் கழுத்தில் குத்தியுள்ளார்.  இதில் சம்பவ இடத்திலேயே குண பிரியா உயிர் இழந்தார்.  இதனையடுத்து அவரின் உடலை மறைக்க மலையில் இருந்து உருட்டி உள்ளார்.  இதில் குண பிரியாவின் உடல் பாறையில் விழுந்தது.  தொடர்ந்து யாருக்கும் தெரியாமல் கார்த்திக் சுற்றிி திரிந்து உள்ளான். சி சி டிவி கேமராவின் மூலம் கார்த்திகை போலீசார் பிடித்தனர். அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். காதலித்து மணந்த மனைவியை கர்ப்பிணி என்று பாராமல் அடித்துக் கொன்ற சம்பவம் வேலூர் பகுதியில் மிகுந்த பரபரப்பு குடும்பத்தாருக்குமிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!