தமிழகம்

பி .ஏ .சி .எம். மேல்நிலைப் பள்ளியில் 74 வது குடியரசு தின கொண்டாட்டம்.

95views
ராஜபாளையம் பி.ஏ. சி .எம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து 74 வது இந்திய குடியரசு தின கொண்டாட்டம் அனைத்து ஆசிரியர்கள் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொள்ள மிக சிறப்பாக நடைபெற்றது. பள்ளித் தமிழாசிரியர் திரு அருண்குமார் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.பள்ளி தலைமை ஆசிரியர் திரு மாரிமுத்து அவர்கள் தேசியக் கொடியை பறக்க விட்டு குடியரசு தின உரை நிகழ்த்தினார்கள்.பள்ளியின் சமூகவியல் ஆசிரியர் திரு என் ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.மாணவர்களுக்கு ராணுவத்தில் பணி புரியும் நமது ராணுவ வீரர்களை பற்றிய உயர்ந்த எண்ணங்களை உருவாக்க தற்பொழுது ராணுவத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஜே சி ஓ ஜெலஸ்டின் அவர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு எழுச்சி பேருரை ஆற்றினார்கள்.மேலும் மாணவர்களின் கவிதை, குடியரசு தின உரை வீச்சு, மற்றும் நடனம் என கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.விழாவின் இறுதியில் உதவி தலைமை ஆசிரியர் திரு கருணாகரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!