தமிழகம்

காரியாபட்டியில் சமுத்திரம் டிரஸ்ட் சார்பில் பஞ்சவடி மரக்கன்றுகள் நடும் பணியினை காரியாபட்டி பேரூராட்சி சேர்மன் ஆர்.கே.செந்தில் துவக்கி வைத்தார்.

100views
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி சமுத்திரம் டிரஸ்ட், சங்கமாஸ் இன்டர்நேஷனல், இந்தியன் ஆர்கானிக் ஃபார்ம் அசோசியேஷன் மற்றும் தமிழ்நாட்டில் 108 தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 12 ஆயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த ஆலமரம், அரசமரம், வில்வமரம், அத்திமரம், அசோகமரம் போன்ற மரபு வழி மரங்களைக் கொண்டு காற்றின் மாசுபடுதல், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பஞ்சவாடி தெய்வீக வனங்களை உருவாக்கும் விதமாக மரம் நடுவிழா காரியாபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சமுத்திரம் டிரஸ்ட் நிறுவனர் மங்களேஸ்வரி தலைமை வகித்தார். சமுத்திரம் டிரஸ்ட் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அருண்குமார், வரவேற்றார். மரம் நடும் பணியை காரியாபட்டி பேரூராட்சி தலைவர் R.K.செந்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் காரியாபட்டி சப் இன்ஸ்பெக்டர்கள் அசோக்குமார், ஆனந்த ஜோதி, பள்ளி தலைமை ஆசிரியை சாந்த சுந்தரி, கிரீன் பவுன்டேசன் நிறுவனர் பொன்ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சங்கரேஸ்வரன், முனீஸ்வரி , சரஸ்வதி, தீபா, முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் மனோஜ்பிரபாகர், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் சரவணன், வேப்பங்குளம் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நிறைவாக சமுத்திரம் ட்ரஸ்ட் திட்ட இயக்குநர் முத்துராஜா நன்றியுரை கூறினார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!