தமிழகம்

ஆட்டம் பாட்டத்துடன் புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய அதிமுகவினர்

72views
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அஇஅதிமுக நகர, ஒன்றிய கழகம் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 106 -வது பிறந்தநாள் விழா முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மாவட்ட அம்மா அம்மா பேரவை செயலாளர் தலைமையில் ஊர்வலமாக வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இராஜபாளையம் அஇஅதிமுக நகர, ஒன்றிய, பேரூர் கழகம் சார்பில் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்த நாள் தின விழா முன்னிட்டு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ் தலைமையில் 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் பழைய பேருந்து நிலையம் முதல் PACR சாலை வழியாக ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்த ஊர்வலத்தில் அதிமுக மூத்த கட்சி தொண்டர் ஆட்டம் பாட்டத்துடன் சென்றனர்
நிகழ்ச்சியில் வடக்கு, தெற்கு நகர கழக செயலாளர்கள் வக்கீல் துரைமுருகேசன், பரமசிவம் மற்றும் ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் நவரத்தினம், குருசாமி, பொன்ராஜ் பாண்டியன், மாவட்ட மகளிரணி இணை செயலாளர் அழகு ராணி, நகர மகளிரணி செயலாளர் ராணி உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் எம்.ஜி.ஆர் புகழ் ஒங்குக என கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!