தமிழகம்

நூத்துலாபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசின் மக்கள் தொடர்பு முகாம்: அனைத்து நலத்திட்ட உதவிகள் பெற பயனாளிகளுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி அழைப்பு

253views
வருகிற 8.02.2023 ஆம் தேதி (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் விசாகன் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நிலைக்கோட்டை தாலுகா நூத்துலாபுரம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதால் 18.01.2023 புதன் கிழமை காலை எஸ்.தும்மலபட்டி முருகன் கோவில் மண்டபத்தில் அனைத்து துறை அலுவலர்களால் முன்னோடி மனுக்கள் பெறப்பட உள்ளது இம்முகாமில் வீட்டுமனை பட்டா , முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, மயானத்திற்கு தேவையான அடிப்படை தேவை வசதி, நில பட்டா, உட்பிரிவு பட்டா புதிய ரேஷன் கார்டு, வாரிசுச் சான்று விதவைச் சான்று, ஆதரவற்ற விதவை சான்று மற்றும் அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான மனுக்கள் அளித்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறுமாறு நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!