தமிழகம்

வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

293views
தமிழர் பாரம்பரிய முறையில் டாக்டர்கள் , சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் சேலை, வேஷ்டி, சட்டை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர்.  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வலையங்குளத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வலையன்குளம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வளாகத்தில் வட்டார மருத்துவர் தனசேகரன் ,வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் மருத்துவர்கள் சுகாதார ஆய்வாளர்கள் செவிலியர்கள் அனைத்து சுகாதார மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 186 பேர் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர்.
மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர் கள்,செவிலியர்கள், ‘பொங்கலோ பொங்கல் என உற்சாகத்துடன் கூவி கொண்டாடினர்.  தமிழர் பாரம்பரிய முறைப்படி வேஷ்டி சட்டை மற்றும் சேலை அணிந்து பொங்கல் விழா கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!