தமிழகம்

உசிலம்பட்டியில் பள்ளிக்குழந்தைகள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.

138views
தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி கல்லூரிகள் உள்பட அனைத்துப் பகுதிகளும் சமத்துவ பொங்கல் விழாவாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு உதவி பெரும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற்றது.இதில்; ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் இணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.பின்; புகையில்லா போகி பகையில்லா பொங்கல் சாதி மதம் மறந்து சமத்துவம் காண்போம் என்ற உறுதிமொழியை ஆசிரியர்களுடன் இணைந்து பள்ளி மாணவ மாணவியர்கள்; எடுத்துக்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி நகர்மன்றத்தலைவர் சகுந்தலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் பண்டிகையின் சிறப்புகளை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.விழா ஏற்ப்பாடுகளை பள்ளித்தலைமையாசிரியர் மதன் பிரபு செய்திருந்தார்.
செய்தியாளர் : உசிலை சிந்தனியா

Right Click & View Source is disabled.

error: Content is protected !!