தமிழகம்

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதா பீதியை கிளப்பிய நபர் கைது

300views
கோயம்புத்தூரில் இருந்து மதுரை வரும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு வெடிக்கப் போவதாக ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு மையத்திற்க்கு தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து,
மதுரை ரயில் நிலைய இருப்புப்பாதை காவலர் அந்த ரயில் மதுரை வந்தடைந்ததும், வெடிகுண்டு நிபுணர்களால் சோதனை செய்ய அசம்பாவிதம் சூழல் ஏதும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இது தொடர்பாக செல்போன் அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடிய போலீசார் மேலூரை சேர்ந்த போஸ் (வயது 35) என்பவரை கைது செய்து விசாரித்ததில்,
அந்த நபர் அதே ரயிலில் பயணம் செய்து வந்ததாகவும் அதே ரயிலில் அருகில் அமர்ந்து பயணம் செய்தவர்களுடன் ஏற்பட்ட தகராரின் காரணமாக அவர்களை அச்சுறுத்த வேண்டி போலிஸ் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு பரபரப்பையும் பீதியையும் மற்றும் பயத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு ஒரு பொய்யான தகவலை அவசர காவல் அழைப்பு மூலம் சொன்னதாக விசாரணையில் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து போஸ் என்பவரை மதுரை இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!