தமிழகம்

அரசு பணிகளில் காலி இடங்களை படித்த பட்ட தாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்க மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியினர் மனு

123views
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில பொது செயலாளர் ஷாஜகான் தலைமையில் இரண்டு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க பட்டது.
அரசு பணிகளில் காலி பணி இடங்களை படித்த பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்தவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை வாய்ப்பு வழங்கி பட்டத்தாரிகளுக்கு முழுமையாக மாதம் மாதம் உதவி தொகை ரூ 4000-/ வழங்க வேண்டும்.
உடல் ஊனம் உள்ளவர்களில் 70% ஊனம் உள்ளவர்கள் மற்றவர்களின் உதவியுடன் தான் ஜீவான்ம்சம் செய்ய வேண்டி உள்ளது. பொருளாதாரம் சூழ்நிலையில் அவர்கள் நிலை தடுமாறி வாழ்க்கை நடத்த வேண்டி உள்ளதால் அவர்களுக்கு மாதம் மாதம் ரூ3000-/வழங்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக கேட்டு கொள்கிறோம். என்று அவ்மனுவில் கூறியுள்ளனர்.
இந்த நிகழ்வில் மாநகர மாவட்ட செயலாளர் அன்சல் ரஹ்மான் – தொழிலாளர் அனி மாவட்ட தலைவர் அப்பாஸ் – மகளிர் அனி தலைவி மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர் .
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!