125views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகர் வித்யாநிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் காந்திநகர் ரங்காலாயா மண்டபத்தில் பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு ஊக்குவிக்கும் விதத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் சுரேகா ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் பத்ரிநாத் வரவேற்றார். ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி) கலியமூர்த்தி சிறப்புரையாற்றினார். பள்ளி மாணவ – மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில் துணை முதல்வர் கலைச்செல்வி நன்றி கூறினார்.