தமிழகம்

ஜெகோவா நிசி பவுண்டேஷன் மூலம் குடிசைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி

306views
தென்காசி மாவட்டம் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பின்புறம் குடிசைப்பகுதியில் வாழும் ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு ஜெகோவா நிசி பவுண்டேசன் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.  ஏழை மாணவர்களுக்கு  கல்வி உபகரணங்கள், விதவைப்பெண்களுக்கு புதிய ஆடை, மற்றும் அவர்களுக்கு தேவையான‌ சமையல் மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியை ஜெகோவா நிசி பவுன்டேஷன் நிறுவனர் இம்மானுவேல் பிரசாத் அவர்கள் துவங்கி வைத்தார்.  தென்காசி நகர் மன்ற தலைவர் R.சாதிர் மற்றும் தென்காசி நகர்மன்ற துணை தலைவர் KNL சுப்பையா, 20வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் M.செய்யது சுலைமான் ரஃபீக், 3வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கல்பனா கங்காதரன், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகம்மது அலி ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தென்காசி நகர் மன்ற தலைவர் திரு R.சாதிக் அவர்கள் அந்த பகுதியில் உள்ள இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தேவைகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கு வீல் சேர் வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார்.,அவர்களின்‌ அன்பாக பேச்சைக்கேட்ட குழந்தைகள் கண்ணீர்மல்க புன்னகையுடன் நன்றி கூறினார்கள். ஏழை மக்களின்‌ வாழ்வை முன்னேற்ற சமூக சேவைகளை செய்து வரும் ஜெகோவா நிசி பவுண்டேஷன் மற்றும் பசியில்லா தமிழகம் குழுவினருக்கு தென்காசி பொதுமக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை சாதிர் அவர்கள் தெரிவித்தார்கள்.  மேலும் நிகழ்ச்சியை பசியில்லா தமிழகம் முகம்மது அலி ஜின்னா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஜெகோவா நிசி பவுண்டேஷனைச் சார்ந்த ஃபிராங்லின் பாலமுருகன்,ஜீவா,ராஜா,அந்தோணி,பாலசுப்ரமணியன்,ஷேக் கலீல் ரகுமான்,சிவசக்திவேல்,மகாராஜன்,ரகுராம், கிஷோர் குமார்,முகமது யூனுஸ்,பாலகிருஷ்ணன்,சிவா,சீனிபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!