தமிழகம்

வேலூரில் தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் கௌரவத் தலைவர் சி.ராஜவேலு பங்கேற்பு

75views
வேலூர் அடுத்த சத்துவாச்சாரி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.  மாநில பொதுச்செயலாளர் தொல்காப்பியன் முன்னிலை வகித்தார்.பாலாஜிசிங் வரவேற்றார்.  சிறப்பு அழைப்பாளராக மாநில கெளரவத் தலைவர் சி.ராஜவேலு கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாநில பொருளாளர் ஜோதிலிங்கம், மாநில துணைத்தலைவர் மாயன், இணை செயலாளர் ஸ்ரீதர், விஜயகுமார், தாண்டவ மூர்த்தி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  பல்வேறு மாவட்டங்களிலிருந்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  தோட்டக்கலை பணியாளர்களை நிரந்தரமாக்கப்பட வேண்டும், நிரந்தர தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத்தை அமுல்படுத்த வேண்டும். வருங்கால வைப்புநிதி முன்புபோல் வசூல் செய்ய வேண்டும் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட்டன. ஏற்பாட்டை பணியாளர் சங்க நிர்வாகிகள் செய்து இருந்தனர். முடிவில் ஜெயப்பால் நன்றி கூறினார்.
செய்தியாளர் : கே.எம். வாரியார், வேலூர் மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!