தமிழகம்

அதிரடியை வேட்டையில் களம் இறங்கிய மதுரை மாநகர இன்ஸ்பெக்டர் கூண்டோடு சிக்கிய போதை மாத்திரை கும்பல் மதுரை பள்ளிக்கூடம் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த மூன்று இளைஞர்கள் கைது

170views
மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்று வருவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமாக இருந்து கொண்டிருக்கிறது.
இதனை அடுத்து எஸ் எஸ் காலனி போலீசார் தீவிர வேட்டை தொடர்ந்ததன் அடிப்படையில் எஸ் எஸ் காலனி மற்றும் அதை சுற்றி உள்ள பள்ளிக்கூடங்களுக்கு மாணவ மாணவிகளுக்கு போதை மாத்திரைகள் விற்று வந்ததாக தெரிய வந்ததையடுத்து சீருடை இன்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் போதை மாத்திரைகளோடு மூன்று வாலிபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த மாத்திரைகளை அவர்கள் எங்கிருந்து வாங்குகின்றனர் இதுவரை எத்தனை மாணவர்களுக்கு விற்பனை செய்துள்ளனர் போன்ற பல்வேறு கோணங்களில் விசாரணை தற்சமயம் ஆரம்பித்துள்ளது.
எஸ் எஸ் காலனி இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அதிரடியாக இந்த மூன்று பேரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!