தமிழகம்

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில், மனித உரிமைகள் நாள் உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் தலைமையில் ஏற்றுக் கொண்டனர். “மனித உரிமைகள் நாள் உறுதிமொழி”

90views
இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும் இந்தியாவில் செயல்படுத்ததக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப் பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும் பற்று உறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம் சொல் அல்லது செயல் மூலம்இ பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என, மேயர் வாசிக்க அனைத்து பணியாளர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இதே போல் , அந்தந்த மண்டலங்களில் உதவி ஆணையாளர்கள் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், துணை மேயர் தி.நாகராஜன் துணை ஆணையாளர் முஜிபூர் ரகுமான், உதவி ஆணையாளர் (கணக்கு) விசாலாட்சி, உதவி ஆணையாளர் (பணி) ஆறுமுகம்
கல்வி அலுவலர் நாகேந்திரன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : வி காளமேகம், மதுரை மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!