தமிழகம்

சிறப்பாக செயல்படும் சின்னமனூர் உழவர் சந்தைக்கு பொது மக்கள் பாராட்டு, கூடுதல் இட வசதி கேட்டு கோரிக்கை

78views
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியில் மக்கள் அதிகம் கூடும் பிரதான சீப்பாலக்கோட்டை சாலையில் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை சார்பாக உழவர் சந்தை செயல்பட்டு வருவது சின்னமனூர் மற்றும் அதனையொட்டிய 40-ற்கும் மேற்பட்ட தாய் கிராம பொதுமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறதென சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து சின்னமனூர் உழவர் சந்தையின் மேற்பார்வையாளர் கவாஸ்கரிடம் கேட்டபோது, சின்னமனூரில் உழவர் சந்தையானது கடந்த 2009-லிருந்து தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.உழவர் சந்தையானது மக்கள் அதிகம் கூடும் இடத்தில் இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். மேலும், 9 சென்ட் அளவுள்ள இந்த இடத்தில் கட்டப்பட்ட 14 கடைகளும் தரை தளத்தில் 3 கடைகளும் எனவாக மொத்தம் 17 கடைகளோடு அனுதினமும் சிறப்பாக இயங்கி வருகிறது.
உழவர் சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 10டன் அளவுள்ள காய்கறிகள் விற்பனைக்காக வருகிறது. அதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3 இலட்சம் வரை விற்பனையாகிறது. நாள் ஒன்றுக்கு தோராயமாக சுமார் 2000 வாடிக்கையாளர்கள் முகூர்த்த நாட்களில் 2000த்திற்கும் அதிகமானார் வந்து பயனடைந்து செல்கின்றனர்.
மேலும்,உழவர் சந்தைக்கு கூடுதல் இடவசதி கிடைக்கும் பட்சத்தில் ஏற்கனவே விண்ணப்பித்து காத்திருக்கும் 120 விவசாயிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கடைகள் கொடுக்கப்படுவதன் மூலம் கடைகளும் அதனைத் தொடர்ந்த காய்கனி வரத்துக்களோடு வருவாய் கலந்த விற்பனையும் கனிசமாக உயரும் விவசாயிகளும் பலன் அடைவர் என நம்மிடத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உழவர் சந்தையின் செயல்பாட்டை குறித்து அப்பகுதி வாழ் பயனாளிகளிடத்தில் கேட்டபோது, உழவர்சந்தை சரியாக அதிகாலை 4:30 மணிக்கெல்லாம் திறக்கப்பட்டு அதிகாலை 05 மணிக்கெல்லாம் மேற்பார்வையாளர் வாடிக்கையாளர்களின் பார்வைக்கு அந்தந்த கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை நிலவரத்தை முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் தரமென பிரித்து பதிவு செய்துவிடுவார் பின்பு அவ்வப்போது கடைகளுக்கு சென்று பார்வையிடுவார். ஏற்கனவே பல இடங்களில் திறம்பட பணி செய்த அனுபவத்தால் இங்கும் சிறப்பாக தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.
மேலும்,உழவர் சந்தை வளாகமானது எப்போதும் தூய்மையாக இருப்பதனால் வாடிக்கையாளர்களும் முகம் சுழிக்காமல் வந்து சென்று பயனடைகிறார்கள்.
சுற்றுவட்டார கிராம மக்கள் தங்களது விஷேச வைபவங்களுக்கு அதிகாலை வந்து கீரை முதல் அனைத்து வகையான காய்கறிகளையும் ஒரே இடத்தில் சரியான விலை கொடுத்து தரமாகவும் மன திருப்தியோடு வாங்கி சென்று பயனடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில்,உழவர் சந்தை எங்களது சின்னமனூர் பகுதிக்கு கிடைத்ததென்பதை நாங்கள் வரமாக நினைக்கின்றோம் என தங்களது பேச்சை நிறைவு செய்தனர்.
செய்தியாளர். A. சாதிக்பாட்சா, தேனி மாவட்டம்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!